வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

திரைப்படங்கள்

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது....
லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் டைட்டில் புரோமோ நேற்று மாலை வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் விஜய் மலையாள ரசிகர்களை தவிர்த்தாரா..? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அதாவது, 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் போ...
வைரலாகும் பத்து தல பட பாடல்!

வைரலாகும் பத்து தல பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/erGBtpMPi4Q சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிர...
சமந்தா ரூத் பிரபு,  வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ  இந்திய ஒரிஜினல்  சிட்டாடலில் நடிக்கிறார்!

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும் வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர் சந்தா செலுத்துவ...
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம் ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வரிசையில், முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். கதைப்படி, 1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நிலை இர...
பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் ‘சைந்தவ்’!

பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் ‘சைந்தவ்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான 'சைந்தவ்' திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த...
தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !

தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர். ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தலைப்பு அறிவிப்பு போஸ்டரில் லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது....
அஜய் தேவ்கன் படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது!

அஜய் தேவ்கன் படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'போலா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியாக...
பாலியல் குற்றங்களின் சூழல் குறித்து பேசும் ”மெய்ப்பட செய்”

பாலியல் குற்றங்களின் சூழல் குறித்து பேசும் ”மெய்ப்பட செய்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது? அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றைச் சொல...
கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை பிப்ரவ...