இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஜெய்!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் தனது திறமையை ஜெய் வெளிப்படுத்த உள்ளார்.
நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் ,வடகறி,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் .
இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத்,காளி,பால சரவணன்,முத்துக் குமார் உள்ளிட்ட ...









