திரைப்படங்கள்
முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வ...
90ml ஓவியாவுக்கு வாழ்த்து சொன்ன ஆரவ்..!
நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலைச் சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து,பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாகச் சகஜமாகப் பழகி வருகின்றனர்.
https://twitter.com/Nafeez_Arav/status/1098473222897422336?s=19
இந்நிலையில், ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், 'இது உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான ...
நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி
'நட்பே துணை' எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் - சுந்தர்.சி
நடிகர் ஹரிஷ் உத்தமன்
பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம்.
நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
நடிகர் ராஜ்மோகன் பேசும்போது
ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார்.
நடிகர் எரும சாணி விஜய்
இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தி...
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த "இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்" நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய "தூங்கா நகரம்" திரைப்படம் திரையிடப்பட்டது.
படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்....
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி”
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி '' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையாஇயக்குகிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ள...
விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி .
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர்.
சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்',பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம்.
இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் .
விஜய...
இயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..!
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் "டோரா" இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்..
இப்போது “ இயக்கி “ என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்...
கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்கு காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
ஆனால் ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்..
26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை உரசிப் பார்த்திருக்கிற இயக்கி -யின் இயக்குனர் ஷான் என்ன சொல்கிறார்..
இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்...500க்கும் மேல் டிரிப் அடித்து ...
சீனு ராமசாமியின் புதுப்படம்..!
டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி
எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான "ரெட் ரம்" திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்...
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி
பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது.
உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
"Ageing Superstar" என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார்.
இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....

