வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

Big Boss Show news, CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா   இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள். பாரதிரா...
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் “தீராக் காதல்’*

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் “தீராக் காதல்’*

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் - ஐஷ்வர்யா ராஜேஷ் - ஷிவதா இணையும் 'தீராக் காதல்'*   நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.   'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார்...
‘மல்லிப்பூ’ பாடல் படைத்த  புதிய சாதனை!

‘மல்லிப்பூ’ பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால்...
படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் – துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை

படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் – துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் - துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை தமிழகத்தை சேர்ந்த திட்டக்குடி கண்ணன் ரவி துபாயில் பிரபல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். முதல் முறையாக சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதை விக்ரம் சுகுமார் இயக்கி இருக்கிறார். கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடை பெற்றது. விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும் போது, "லைகா சுபாஷ்கரன் ஒருமுறை என்னிடம் பேசும் போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்போவதாக சொன்னார். அப்போது அவரிடம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என படமெடுக்க வேண்டாம் என சொன்னேன். என் பேச்சைக் கேட்காமல் பொன்னியின் செல்வன் படம் எடுத்தார் பெரிய வெற்றி பெற்றது. எனக்கு அரசியல் தெ...
நன்றிக் கடனுக்காக எடுக்கப்பட்ட இராவண கோட்டம்!

நன்றிக் கடனுக்காக எடுக்கப்பட்ட இராவண கோட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ரம் சுகுமார் இயக்கத்தில் சாந்தனு -கயல் ஆனந்தி ஜோடி நடிப்பில் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் உருவான படம் இராவண கோட்டம். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடை பெற்றது. அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார் இதில் பிரபல தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், ஜான் பிரிட்டோ, ஐசரி கணேஷ், சுரேஷ்காமாட்சி, , இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், பார்தீபன், வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர்ராஜா, பிரேம்ஜி, சிவா, ஆதவ் கண்ணதாசன், ராதிகா, மீனா, குஷ்பு, சுந்தர்சி, பிரசன்னா, ஜி.பி.முத்து, த்யாரிப்பாளர் சிவா, நடிகர் சுப்பு பஞ்சு உட்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் நடித்த எந்திரன்2 படத்திற்கு பிறகு இத்தனை நட்ச்சத்திர பட்டாளத்தோடு துபாயில் நடைபெற்ற முதல் ஆடியோ நிகழ்ச்சி இது. விழாவில் பேசிய பலரும் சாந்தனுவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக ...
வந்தியத்தேவன் – குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது

வந்தியத்தேவன் – குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *"அக நக முகநகையே.."* *வந்தியத்தேவன் , குந்தவையின்* *அழகான காதல் பாடல்* *வெளியானது* லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் "பொன்னியின் செல்வன் - 2" திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. “பொன்னியின் செல்வன் - 1” கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெ...
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த சிம்ரன், லைலா கூட்டணி!

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த சிம்ரன், லைலா கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி ! ஈரம் வெற்றிப்படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்! தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில், திரையில் இணைந்து தோன்றவுள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார். ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன...
சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்....
பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன் !

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்ப...
தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்!

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்...