சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்த ரசிகர்கள்!

ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண் தற்போது ஆர்சி15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படப்பிடிப்பில் பங்கேற்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கிளம்பினார். அவர் ராஜமுந்திரியில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு, எடிட்டர் ஷமீர் முகமது மற்றும் இசையமைப்பாளர் எஸ் தமன் பணியாற்றியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் ...
ராக்கெட்ரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராக்கெட்ரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஆர்.மாதவன். இவர் முதல் முறையாக இயக்குனராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் மாதவன் அறிவித்துள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து, எழுதி, இயக்கியும் உள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா க...
”நானே வருவேன்” படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!

”நானே வருவேன்” படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடிகர் தனுஷுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இந்த கூட்டணியின் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ”நானே வருவேன்” படத்தின் அறிவிப்பு மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினர். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. இதனிடையே, நடிகர் தனுஷ் தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால் நானே வருவேன் படப்பிடிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு படங்களின் பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும...
வைரலாகும் மாறன் படத்தின் போஸ்டர்!

வைரலாகும் மாறன் படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், காதலர் தினமான இன்று மாறன் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியி...
அமீர் – வெற்றிமாறன் கூட்டணியின் டைட்டில் போஸ்டர் ரிலிஸ்!

அமீர் – வெற்றிமாறன் கூட்டணியின் டைட்டில் போஸ்டர் ரிலிஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள...
வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகவுள்ளதாக ஒரு புகைப்படத்தை இணைத்து படக்குழு அறிவித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பர...
மீண்டும் வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி!

மீண்டும் வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமா திரையுலகில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடி தான், தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை பதித்திருந்தார். கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் பொழுது அவ்வப்போது ரஜினி, விஜய் என பல நடிகர்களுக்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். இவர் தற்போது முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திற்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தாமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கு...
மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
    மகான் படம் எடுத்தவர்களுக்கும், மராட்டியத்தில் கோட்சேவை வழிபடு நாயகனாக வடிவமைத்து நாடகம் நடத்துபவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை என காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடித்துள்ள ' மகான் ' படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குனரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. ...
பரபரப்பான அரசியலைப் பேசப்போகும் சமுத்திரகனியின் பப்ளிக்!

பரபரப்பான அரசியலைப் பேசப்போகும் சமுத்திரகனியின் பப்ளிக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எந்த அரசியலை பேச போகிறது ‘’பப்ளிக்’’ திரைப்படம். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது. சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை ...
ஒருவழியாக விகரம்  ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

ஒருவழியாக விகரம் ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிச்சிக்கிட்டிருக்கார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். கொரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை இந்தப் படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்கள். பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தது படக்குழு. இந்தப் படத்தின் விக்ரம் தொடர்பான காட்சிகள...