பலூன் படத்தால்ரூ.1.5கோடி நஷ்ட புகார்… ஜெய்யை சிக்க வைத்தாரா அஞ்சலி..!?
நடிகர் ஜெய் மீது புகார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு
‘பலூன்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண் பாலாஜி ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
எங்களுடைய ‘பலூன்’ திரைப்படம் திட்டமிட்டதற்கு மாறாக, 9 மாதங்கள் தாமதமாக வெளியானது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய். இந்த படத்தின் நாயகனாக நடித்த அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் படவெளியீடு தள்ளிப்போனது. டப்பிங்கிற்கு கூட சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது, நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு நடந்து கொண்டார். இங்கு 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தோம். ஆனால் ஜெய் வரவில்லை. இதனால் ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
அஞ்சலிக்...









