தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளது.
'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது.
இதனை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தெலுங்கில் முன்னணி நடிகரை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்....









