வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

நடிகர்கள்

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களை...
விஜய் சேதுபதி ‘ஜுங்கா’பட  டப்பிங் துவங்கியது..!

விஜய் சேதுபதி ‘ஜுங்கா’பட டப்பிங் துவங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்க...
காலா படத்தில்  டப்பிங் முடித்த நானா படேகர்..!

காலா படத்தில் டப்பிங் முடித்த நானா படேகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர்  தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது .டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது. இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் ...
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்

இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்   ‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா  ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ்,  ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன்...
ஷிவ்ராஜ் இயக்கத்தில் மீண்டும் சத்யராஜ் இணைந்த  “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” 

ஷிவ்ராஜ் இயக்கத்தில் மீண்டும் சத்யராஜ் இணைந்த “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ்நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "அடிதடி". மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒருபடத்திற்காக இணைந்துள்ளது. "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாகM.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும்என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது"சினிமா நடிகனும் அரசியல்வாதியும்". தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்துவங்கவுள்...
ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல –  கலக்கும் காலா

ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல – கலக்கும் காலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களை அல்லோ கல்லோலப்படுத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் கரிகாலன் என்ற பெயரில் நடித்திருக்கிறார். இந்த டீசரில், குறிப்பாக ரஜினி பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காலா - என்ன பேருய்யா என்ற நானா படேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற சமுத்திரக்கனியின் பதில் பின்னணியில் ஒலிக்கின்றது. கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் வண்ணமாக தெரியும். கியா ரே, செட்டிங்கா, வேங்கை மவன் ...
தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தீபாவளி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்...
நேபாளத்தில்  சினிமா பயணத்தை நாளை துவக்குகிறார் துருவ் விக்ரம்

நேபாளத்தில் சினிமா பயணத்தை நாளை துவக்குகிறார் துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார்  இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக நடிகர் விக்ரமுடன், `வர்மா' படக்குழு நேபாளம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கவும், நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் சென்னை வந்ததாகவும், வர்மா படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து துருவ்விடம் பேசிவிட்டு சென்றதாகவும் ஒரு தகவல் பரவ...
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும்’ என்றும் அறிவித்துள்ளார்! இது கமலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது விஜய் நடிப்பில் அவரது 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....