இங்லிஷ் பட உலகம் மாதிரி தமிழ் பட உலகம் அழகா மாறிகிட்டே வருது – கண்ணே கலைமானே வசுந்தரா
பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.
எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.
தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.
‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.
இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒ...









