நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன.
தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன்.
தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்....
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார்.
இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிந்துமதி, முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். வருகிற பிப்ரவரி ...
நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.
ஏற்கெனவே, நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறா...
நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், பிரபல நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்று நுழைந்துள்ளது. மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக...
மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்!
நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடி...
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!
நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.
ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து...
ஆபாச பட தயாரிப்பில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை: ராஜ் குந்த்ரா!
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் ஆபாச படம் எடுத்து, அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதேபோல ஆபாச படம் வினியோகம் செய்தது தொடர்பான வழக்கிலும் ராஜ்குந்த்ராவை கைது செய்ய கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.
இந்தநிலையில் ராஜ்குந்த்ரா தன் மீதான வழக்குகள் குறித்து கூறியிருப்பதாவது:-
நீண்ட சிந்தனைக்குப் பிறகு, பல தவறான மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மிதந்து வருவதைக் கருத்தில் கொண்டு, எனது மவுனம் பலவீனமாக தவறாகக் கருதப்பட்டதாலும், நான் என் வாழ்நாளில் ‘ஆபாசப் படங்கள்' தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டதில்லை என்று கூறி தொடங்க விர...
கையில் சுத்தியலுடன் நயன்தாரா... வைரலாகும் வீடியோ!
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது - பிரபல நடிகை!
சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர். நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.
ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்பாள...