வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

நடிகைகள்

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்! பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அவர், தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபத...
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி! ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பி...
கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்....
சூர்யா – பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சூர்யா – பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யா - பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். அப்படத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க ...
சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது!

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது! பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ...
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி! நடிகை பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்...
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு! நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே திருமண உறவை முறித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு...
தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது!

தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது! தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வெளியானது. இந்தியன், சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன. இந்த நிலையில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. தர்மதுரை படம் 2016-ல் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சீனுராமசாமி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.ச...
செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்....
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை! ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....