நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்!
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். அதிரடி படங்களுக்கு புகழ்பெற்றவர். பின்னர் தயாரிப்பாளராகி பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படம் மூலம் அறிமுகமான இவர் அன்பிற்கினியாள் படம் மூலம் கவனிக்கப்பட்டார்.
அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஷாலினி இயக்கத்தில் உருவாகும் 'கண்ணகி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிற...









