வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி

ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஜோதிகா பேசிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை... அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது விழாவில் பேசிய ஒரு கருத்து கடந்த சில நாட்களாக சர்ச்சையாக்கப்பட்டு விவாத பொருளாக மாற்றப்பட்டது இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்த சூர்யா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் உள்ள கருத்து; மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிறோம். அறிஞர்களும், ஆன்மீக பெரியவர்களும் ஏற்கனவே சொன்ன கருத்தைத்தான் ஜோதிகாவும் பேசியிருக்கிறார். எப்போதோ ஒரு விழாவில் பேசியது இப்போது விவாத பொருளாக மாற்றப்படுகிறது. ஊடகங்கள் இந்த சர்ச்சையை மிக சரியாக கையாண்டன. கோயில்களைப் போலவே பள்ளிகளும், மருத்துவமனைகளும் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வல...
சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!

சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஒற்றுமையாக இருப்போம்... டிஜிட்டல் ரிலீசால் திரையுலகம் அழியாது... தயாரிப்பாளர் தாணு திடீர் வீடியோ! டிஜிட்டலில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சூர்யா எடுத்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பிரமாண்ட தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.   அதில் கூறியிருக்கும் முக்கிய தகவல்: பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரானா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரானாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள். அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொக...
டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம்  வாங்க களம் இறங்கிய அரசு!

டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம் வாங்க களம் இறங்கிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் வெளியிட செய்த முடிவுக்கு தியேட்டர்கள் அதிபர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு அடுத்ததாக வரும் சூர்யா, கார்த்தி,ஜோதிகா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏராளமான தயாரிப்பாளர்கள் சூர்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுகிறது. இப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சமரசம் செய்து வைக்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை.  ...
டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படம் டிஜிட்டல் ரிலீஸ்... சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு! ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை கடந்த மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கால் முடங்கிப் போனது. திரையுலகமும் ஒட்டுமொத்த பணிகளை நிறுத்தி முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். எல்லா பணிகளும் முடங்கி இருந்தாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமே இப்போது தனது வேலையை முன்பைவிட மிக அதிகமாக பரபரப்பாக இயங்கி வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டாலும் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் டிஜிட்டல் மூலமாக திரைப்படங்களை வீடுகளிளேயே பார்த்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக ஜோதிகாவின் ப...
ஜோதிகா படம் டிஜிட்டலில் ரிலீஸ் நடிகர் சூர்யா எடுத்த முடிவு சரியா!? – கோடங்கி பார்வை

ஜோதிகா படம் டிஜிட்டலில் ரிலீஸ் நடிகர் சூர்யா எடுத்த முடிவு சரியா!? – கோடங்கி பார்வை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டருக்கே வராமல் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் வெளியானதும் திரையுலகில் பெரும் பரபரப்பு. "அப்பாடா... பூனைக்கு ஒரு வழியாக மணி கட்டி விட்டார்கள்" என்று ஒருசாராருக்கு மகிழ்ச்சி. அதே நேரம் இதுநாள் வரை எத்தனை கோடி முதல் போட்டு அல்லது கடன் வாங்கி படமெடுத்தாலும் இத்தனை ஷோ தான் தருவோம் என்றும், அப்படியே கையில் காலில் விழுந்து ஷோ வாங்கினாலும் 60-40, 70-30 என பர்சண்டேஜ் போட்டு, அப்படி ஓடிய படத்துக்கான ஷேர் தொகையையும் அத்தனை சீக்கிரம் தராமல் மாத கணக்கில் இழுத்தடித்து தயாரிப்பாளர்களை அலையவிட்டு தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த தியேட்டர் முதலாளிகளுக்கு இந்த டிஜிட்டல் ரிலீஸ் முடிவு பயங்கர ஷாக் ஆக்கி இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் புதுசு புதுசாக வரும்போது அதற்கு தக்க தொழிலில் தங்களை மாற்றிக் கொ...
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள். கொரானா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது. இந்த சூழலில் இந்த படத்தை தியேட்டர்கள் திறந்து ரிலீஸ் செய்வதில் காலதாமதம் ஆகும் என்பதால் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது. அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் டிஜிட்டலில் படம் பார்ப்பது அதிகரித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு...
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் வெளியிட திடீர் எதிர்ப்பு!

ஜோதிகா படத்தை டிஜிட்டலில் வெளியிட திடீர் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
  ஜோதிகாவின் படத்தை டிஜிட்டலில் வெளியிட திடீர் எதிர்ப்பு. இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வந்தது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு பன்னீர் செல்வம் கூற...
ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!

ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்! கொரானா காரணமாக மூடப்பட்டு இருக்கும் தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் இருக்கிறது. அதோடு, இந்த கொரானா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட படங்களின் நிலை பெரும் சிரமத்தில் உள்ளது. இந்த சூழலில் நாடு முழுதும் டிஜிட்டல் மூலமாக நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதனால் தியேட்டர்கள் ரிலீசுக்கு காத்திருக்காமல் நேரடியாக டிஜிட்டலில் படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதாக நம்பப்படுகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் ...
பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்- அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம். ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர். ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது? உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்...
லாக்டவுன் நேரத்தில் இப்படியெல்லாம் வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க ப்ளீஸ் – குஷ்பு

லாக்டவுன் நேரத்தில் இப்படியெல்லாம் வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க ப்ளீஸ் – குஷ்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஒருவேளை உணவுக்கே மக்கள் திண்டாடும் போது இப்படி வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க - குஷ்பு வேண்டுகோள் கொரானா ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு திண்பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றனர். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, "லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே நாட்டில் பலரும் போராடும் நிலை இருப்பதால், இது போன்ற தருணத்தில் கண்ணுக்கு கவர்ச்சியாக கவரும் விதமான உணவு வகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது. ஏழை எளிய மக்கள் து...