ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு
ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது;
நடிகர் அசோக் செல்வன் பேசியது...
ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...









