ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

நடிகைகள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (30.01.2022) தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே 14 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். அதன் விவரம்: முதல் சீசனில் இருந்து ஜுலி, சினேகன், சுஜாவும், இரண்டாம் சீசனில் இருந்து தாடி பாலாஜி மற்றும் ஷாரிக்கும்,  மூன்றாம் சீசனில் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமாரும், நான்காம் சீசனில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி மற்றும் சுரேஷும், ஐந்தாம் சீசன...
நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்!

நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்! நடிகை வாணி போஜன் மற்றும் 'மெஹந்தி சர்க்கஸ்', 'பெண்குயின்' ஆகிய திரைப்படங்களில் நடித்த மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து தற்போது ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'கேசினோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்குகிறார். கேசினோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வாணிபோஜன் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கேசினோ திரைப்படத்திற்கு ஸ்டான்லி சேவியர் இசையமைத்து விக்னேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்....
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்! ‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்....
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்! தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்...
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்! நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினிக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்து வந்தார். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்....
இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இதுதான் நான் செய்த தவறு - வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந...
ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒரு பாடலுக்கு நடனம்.... பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி! ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம்.  ஞானவேல் இதனை இயக்கி உள்ளார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன. தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ ய...
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. &n...