திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

நடிகைகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா! பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார். இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு நிறைவை அடுத்து படக்குழுவினரின் ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்...
’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா

’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா

HOME SLIDER, MOVIES, நடிகைகள்
’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சர்ச்சைக்கு மத்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமந்தாவின் திறமையை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை ஓடிடி என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். ஓடிடியின் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கவுரப்படுத்தும் வகையில் ஃபிலிம் ஃபேர் ஓடிடி விருது வழங்கப்படுகிறது. விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட சமந்தா,'என்னுடைய 5வது ப...
மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா!

மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா! நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன. இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள் என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த...
நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்!

நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்! காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னை...
மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி!

மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி! சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாயோன்' படத்தின் டீசர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ''மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம் என பதிவிட்டிருக்கிறார். 'மாயோன்' பட...
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்!

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்! எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது....
பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா! பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரையுலகத் தோழிகள் பலருடன் செய்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் கடைசி வெற்றிப் படம். இந்த நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது....
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்!

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா ரணாவத்! நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன். இந்த பதிவுக்காக தீய சக்...
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா!

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா! தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தார். அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....