வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

நடிகைகள்

சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும். இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் ஒரு வீடு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்! தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்...
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:- நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போ...
கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்!

கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளாராம். அவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார் என்ப...
பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா!

பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா! தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை ரீத்து வர்மா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரீத்து வர்மா. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருக...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்!

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? - இயக்குனர்கள் விளக்கம்! சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள...
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்! https://youtu.be/PWUcxb52fl0
போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!

போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!! தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. இந்தி திரையுலக போதை...
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கு...
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி! தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில்...