துப்பாக்கி முனையில் ஹன்சிகா..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் `குலேபகாவலி' படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஹன்சிகா அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக `துப்பாக்கி முனை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்....









