திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

நடிகைகள்

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....
கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கார்த்தியின் சுல்தான் அப்டேட்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது....
நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்!

நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?-வைரலாகும் புகைப்படம்! நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள். 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வருடத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் பிளாட்டினம் மோதிரம் பளிச்சிடுகிறது. அந்த மோதிர புகைப்படத்தின் கீழ், “விரலோடு உயிர்கூட கோர்த்து'' என...
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்! மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவு...
பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி!

பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜா ஹெக்டே 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறுகையில், “பிரம்மாண்ட படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உற்சாகமாக உள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்...
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை! ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார். அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என ...
R. கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் புதுப்படம்!

R. கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது. மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட" தி கிரேட் இந்தியன் கிச்சன் " படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு...
மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்!

மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ரித்தேஷ் தேஷ்முக் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பிரீத்தி ஜிந்தாவின் கைகளில் ரித்தேஷ் முத்தமிட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டிருப்பார். இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஒரு வீடியோவை ஜெனிலியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவரை போட்டு உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த க...
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழுவினரின் திடீர் அறிக்கை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜ...
பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் “அந்தகன்” படத்தில் இணைந்த  ஹீரோயின்!

பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் “அந்தகன்” படத்தில் இணைந்த ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் "அந்தகன்" படத்தில் இணைந்த ஹீரோயின்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். நடிகைகள் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளார். தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்த், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியில் ராதிகா ஆப்தே நடித...