போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!!
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது.
இந்தி திரையுலக போதை...
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார்.
அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கு...
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி!
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில்...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் - வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களி...
கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி!
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை அனிதா, ‘அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்...
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!
கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது....
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !
சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...
பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் - சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். நடிகை சஞ்சனா கல்ராணி, சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, சஞ்சனா கல்ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அ...
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவி...