சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

நடிகைகள்

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா  சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார். நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...
ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக  நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக  நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தை கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! இசையமைப்பாளரும்,  நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக  நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இப்படத்தில் 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை'...
ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்ருதிஹாசன் - கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு 'உலகநாயகன்' கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக 'உலகநாயகன்' கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் 'என்னிடம் கேள்வி கேளுங்கள்' என்றொரு அமர்வை தொகுத்து வழங்கினார். அதன் போது அவரது ரசிகர் ஒருவர், 'உங்களது தந்தையுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்பு குறித்த அப்டேட் ஏதாவது இருக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பினார். அது குறித்த தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன், '' அது ஒர...
ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' டிரெய்லர் உறைய வைக்கும் பல திரில்லர் காட்சிகளை கொண்டுள்ளது! பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது. 2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது. இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான ...
எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் S.ஹரி உத்ரா. சமூகத்திற்கு தேவையான கதையை எடுத்த இயக்குனருக்கு அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. கதாநாயகன் சரத் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல், கோபம் என அனைத்திற்கும் ஒரே முகபாவனையை கொடுத்து சலிக்க வைத்துள்ளார். பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இவர் குப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கோச்சிங் கொடுத்து முன்னேற்றி வருகிறார். இதில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கால்பந்தாட்டத்தில் ஒழுங்காக கவனம் இல...
சச்சின் – அபர்நதி நடிப்பில்ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ’டீமன்’ படத்திற்கு அதிக ஸ்கிரீன்ஸ்!

சச்சின் – அபர்நதி நடிப்பில்ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ’டீமன்’ படத்திற்கு அதிக ஸ்கிரீன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் - அபர்நதி நடிக்கும் ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது! சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'டீமன்' படத்தினை தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். 'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவிய தலைவன்', 'ஜெயில்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது குறித்தது இயக்குநர் ரமேஷ் பழனிவேல் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களின் ...
கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம்

கோபம்.. அழுகை.. ரிலாக்ஸ்.. ; கிளிசரின் போடாமலேயே அசத்திய குப்பன் பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சரண்ராஜ். 20 வருடங்களுக்கு முன் தான் நடித்த அண்ணன் தங்கச்சி என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறிய சரண்ராஜ், தற்போது தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கும் ‘குப்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கதாநாயகிகளில் ஒருவரான பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறும்போது, “இந்தப் படத்திற்காக நான் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, சரண்ராஜ் சாரின் படத்தில் தான் நடிக்க போகிறேன் என்பது த...
வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்த ‘ஜவான்’

வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்த ‘ஜவான்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது! ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெர...
ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ படக் குழு

ஊடகத்திற்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘அடியே’ படக் குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்...
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘ஜவான்’ பதுங்குகிறதா? பாய்கிறதா? 3.5/5 கதைப்படி ராணுவ வீரரான ஷாருக்கான், ராணுவத்துறையில் நடந்த ஒரு மோசடி குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அதனால், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாருக்கானை தேசதுரோகியாக முத்திரை குத்தி கொலை செய்துவிடுகிறார். ஷாருக்கானின் மனைவி தீபிகா படுகோனே கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது அப்பாவின் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதோடு, அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்காக புதிய வழியில் போராட்டம் ஒன்றை அறங்கேற்றுகிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பதை அதிரடியாகவும், அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார். அப்பா விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் ...