அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார்.
”ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ...









