பரிமளா & கோ விமர்சனம் 2.5/5
பரிமளா & கோ விமர்சனம் 2.5/5
ஒரு ரவுடி கொலையால், அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிற குடும்பம் ஒன்று சந்திக்கும் சிக்கல்களே கதை!
பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதி தங்களின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) உடன் அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஏரியாவைச் சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும் வர்கீஸ் (சாண்டி) மதுமிதாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை செய்கிறார். பரிமளா குடும்பத்து நபர்களையும் சீண்டுகிறார்.
ஆனால் மூத்த மகளுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் அந்த தொல்லை அதிகரிக்க, அவரது குடும்பத்தினரும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குடும்பமே குழப்பத்தில் இருக்கும் நேரத்தில், சாண்டி திடீரென கொலை செய்யப்படுக...









