வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் - பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். ...
பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி!

பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி! தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து காயல் என்னும் படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ்திலக், பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை தமயந்தி இயக்கி இருக்கிறார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது....
ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!

ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா - வைரலாகும் புகைப்படங்கள்! வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது திரிஷா தான், அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன....
கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்! தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண...
லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்!

லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்”...
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி! நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் நடிக்க சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டால்...
60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா!

60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா! நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, அடுத்ததாக அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம். படத்தில் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடமாம். அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் இப்படம் தனக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக ...
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை!

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை! ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காலா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து டெல்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் ஹூமா குரேஷி ஏற்படுத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார். ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவே...
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை!

விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - பிரபல நடிகை! 'உன்னை தேடி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு, 'ஆனந்த பூங்காற்றே', 'ரோஜா வனம்', 'வெற்றி கொடி கட்டு', 'பேரழகன்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' மற்றும் 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் "வாழ மீனுக்கு" என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் ...
ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா!

ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா! கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார். இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். கொரியன் மொழியில் உருவான ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்துக்காக இருவரும் கராத்தே உள்ளிட்ட முக்கிய ஆக்‌ஷன் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது....