வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி!

உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியும் ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு ...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு! ‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடிகர் வைபவ்வு...
விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார். இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ச...
சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்!

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சித்தப்பா இரும்பு மனிதர்... ரம்யா பாண்டியன்! நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் இதய குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து அருண்பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன், ’சித்தப்பா ஒரு இரும்பு மனிதர், அவரை யாராலும் எதுவும் அசைக்க முடியாது. ...
என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை வருத்தம்!

என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா... பிரபல நடிகை வருத்தம்! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர் உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் ...
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் – நடிகர் கார்த்தி இரங்கல்!

‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் – நடிகர் கார்த்தி இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
‘பருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம் - நடிகர் கார்த்தி இரங்கல்! மீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்திருந்தவர் பஞ்சவர்ணம். அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே ந...
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்! நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத...
இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! – சமந்தா

இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! – சமந்தா

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம்! - சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது: “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது. கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்...
சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?!

சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?! 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 ...