வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  "Carvaan Lounge Tamil" - "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து வழங்கும் இசை விருந்து.! "Carvaan Lounge Tamil", இது "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி "நினைத்தாலே இனிக்கும்" என்கிற திரைப்படத்தில் அமைந்த  "நம்ம ஊரு சிங்காரி" எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது,   இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர் . பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்கள...
ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். இதனிடையே தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய நயன்தாரா நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ‘நிழல்’ படத்தை அடுத்து மலையாளத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பாட்டு’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய 'அசுரன்', 'தேன்' படங்கள்! இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள் இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அசுர ...
என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா

என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷகிலா பேசும் போது, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன். என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்த...
அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா

அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சித்ராவை போலவே அச்சு அசலாக காட்சியளிக்கிறார் கீர்த்தனா தினகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சித்ரா. அந்த சீரியலில் அவர் முல்லையாக நடித்தது மட்டுமல்லாமல் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதிர், முல்லைக்காக மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடியது. அவர்களுக்கு எப்பொழுது ரொமன்ஸ் வரும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இதுவே அவருக்கு எமனாக வந்து முடிந்துள்ளது. ஹேமந்த் அவரிடம் சீரியலில் இப்படி நடித்ததை வைத்தே சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் நடித்த கால்ஸ் திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேறு வெளியானது. சித்ராவின் முதல் படமும் அது தான் கடைச...
“ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த்!

“ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் திரையுலகின் “ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாஷிகா நடிப்பிற்கு பெயர் போனவர் என்பதை விட அவர் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போன நடிகை. இந்த பொது முடக்கத்தின் போது அவர் உச்சகட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார். அதே போல் தற்போது பச்சை வண்ண உடையில் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரை படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தனது போட்டோ ஷூட் காரணமாக பலரையும் தன் வசம் இழுத்து வருகின்றார்....
ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்

ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா ...
’’நடுக்கடலில் விமானத்தில் ஃபோட்டோ ஷூட்….’’ மாலத்தீவு சென்ற ஹன்சிகா!!

’’நடுக்கடலில் விமானத்தில் ஃபோட்டோ ஷூட்….’’ மாலத்தீவு சென்ற ஹன்சிகா!!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சமீபகாலமான பிரபல நடிகர்களும் நடிகர்களும் மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்று வந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதமுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று வந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டர் அவர்களுகு இலவசமாகவே அனுமதித்ததாக செய்திகள் வெளியானது. பின்னர், நடிகை சமந்தா, வேதிகா, ரகுல் பிரீத்தி சிங், ஆகிரோரும் அடுத்தடுத்து மாலத்தீவுக்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது கடல் பிளேன் பயணத்தில் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்....
தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிட்டது ! Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்க...
திரைப்படமாக வெளியாகும்  நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

திரைப்படமாக வெளியாகும் நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டும...