வெள்ளிக்கிழமை, மே 29
Shadow

நடிகைகள்

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் வைரலானது தற்போது அரை நிர்வாணமான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் அதிகமாக இல்லை. என்றாலும் தான் இளமையாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே இப்போது இந்த படங்களை ஸ்ரேயா வெளியிட்டு இருக்கிறார் ...
ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம்  குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்…!

ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம் குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம் குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்... சொதப்பலில் முடிந்ததா ஸ்டார் விழா...!? தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உட்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். வழக்கம்போல நடிகர்கள் அஜீத், விஜய், சிம்பு, சந்தானம், ஜெய் உட்பட சிலர் கலந்து கொள்ளவில்லை. நட்சத்திர ஆடல் பாடல் விழாவுக்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. விழா நடந்த புக்கிஜாலி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரலாம். ஆனால், கிரிக்கெட் போட்டிகளின்போது பெரும்பாலான கேலரிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவரும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக ...
நீச்சல் உடையில் நடிகை கரீனாகபூர் ..!

நீச்சல் உடையில் நடிகை கரீனாகபூர் ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நீச்சல் உடையில் நடிகை கரீனாகபூர் ..! பிரபல இந்தி நடிகை கரினா கபூர், நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த கரீனா கபூருக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூரின் உடல் குண்டானது. எனவே உடல் பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்து மெலிந்தார். இந்த நிலையில் அவர் ஒரு முன்னணி வார பத்திரிகைக்காக போட்டோ ‘ஷூட்’டில் கலந்து கொண்டார். அப்போது அவர் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றினார். நீச்சல் உடை போட்டோக்களை தனது இன்ல்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுளித்தனர். அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்...
மீண்டும் விஜய் ஜோடியான கீர்த்திசுரேஷ்… யோகிபாபுவுக்கு உயரும் தனி மவுசு..!

மீண்டும் விஜய் ஜோடியான கீர்த்திசுரேஷ்… யோகிபாபுவுக்கு உயரும் தனி மவுசு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
`மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கான முதல் போட்டோஷீட் ஏ.வி.எம். ஸ்டூடியோஸில் நடந்தது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்தார். விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷீம் போட்டோஷீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, விஜய்யுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். முருகதாஸ் ரொம்பவும் அமைதியானவர். அவருடனும், ஏ.ஆர்.ரஹ்மானுடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார். மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்தில் யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப...
மலேசியாவில் வெளியிட்ட ரஜினியின் அதிகபட்ச ஆசை தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதுதானாம்..!

மலேசியாவில் வெளியிட்ட ரஜினியின் அதிகபட்ச ஆசை தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதுதானாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா தொடங்கியது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-கமலஹாசன...
திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடார்பாளார் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ் ஆனந்தன் பி.ஆர்.ஓ. ஆன 60-வது ஆண்டு நிறைவு, பி.ஆர்.ஓ. யூனியன் பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டுகள் ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வி.பி.துரைசாமி, சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஷீலா, ரேவதி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, வெண்ணிறஆடை நிர்மலா, வைஜெயந்தி மாலா, கவிஞர் முத்துலிங்கம், ஆரூர்தாஸ், லதா உள்ளிட்டவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த் திறந்து வைத்தார். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலை வகித்தார். ...
ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..! நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஆண்டின் கடைசி நாள் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளி...
தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.    இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாள...
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு – நயன்தாரா

அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு – நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
அர்த்தமுள்ள படங்களை தருவதுதான் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு - நயன்தாரா நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும். உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள். என் மீதான அன்பினால், வாழ்க்கை அழகானது என்பதை உணர்ந்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என்பதை...
‘பிக் பாஸ்’ ஜூலி முதல் முறையாக கதாநாயகி அவதாரம்..!

‘பிக் பாஸ்’ ஜூலி முதல் முறையாக கதாநாயகி அவதாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.! ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல  தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து ஜூலியிடம் கேட்டத...