கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.
மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதி...
சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!
தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :
“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”
மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில...
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு;
நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”.
https://youtu.be/-RkfhTlgBnE?si=SbuZM8QwWYS_WCIO
அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டா...
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
"சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின...
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.
ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray) இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றி...
மார்ஷல் ராபின்சனின் *எதிர்பார்த்தேன்* என்ற புதிய காதல் பாடல் வெளியீடு
அன்பு, காதல் , தளராத நம்பிக்கை – இந்த மூன்றும் ஒன்றிணையும் புதிய இசைப் படைப்பை இசையமைத்தும் , தயாரித்தும், எழுதியும், பாடியும் உள்ளார் மார்ஷல் ராபின்சன். வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அமைதியாகப் பேணும் தருணங்களை இந்த பாடல் பசுமையாக சித்தரிக்கிறது.
நெஞ்சை நெகிழச் செய்யும் இசை அமைப்பும், ஆழமான குரல்களும், தீவிரமான காதலின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன
இப்பாடல் தற்போது YouTube-ல் வெளியாகி உள்ளது. காதலின் இனிமையும், வலியும் கலந்த அந்த உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லும் இந்த பாடல்.
https://youtu.be/ksg1_VcEn3o?si=nqfmH8X2Xmrfx3bK...
“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது…
எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மைய...
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!
"மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!
டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.
துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில்...