*காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்*
பெண்ணை கடத்தி வந்து தான் திருமணம் செய்ததாக வரும் செய்தி தவறு என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அவரது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
https://youtu.be/SycBVSV36Mk
இந்த நிலையில், முறைப்படி பெண் கேட்டும் தரவில்லை என்பதால் தனது பெற்றோர் முன்னிலையில், செளந்தர்யாவின் முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்றும், செளந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்ததாக வரும் செய்தி வதந்தி என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார்....
உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மணாலி - லே இடையிலான சுரங்கப்பாதை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கபாதையின் சிறப்பம்சங்கள் என்ன?
9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம். என உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள...