வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

செய்திகள்

பாவனாவை படம் பிடித்த செல் மாயமானதில் சதி..!

பாவனாவை படம் பிடித்த செல் மாயமானதில் சதி..!

செய்திகள்
பாவனாவை படம் பிடித்த போன் மாயமானதில் சதி..! பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சி அடங்கியுள்ள செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தியவுடன் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் யாருக்கோ போன் செய்து தகவல் கொடுத்தார். அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை நடிகையை மானபங்கம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கொடூர செயலை வீடியோ எடுத்தது வெள்ளை நிற செல் போனாம். அந்த வெள்ளை நிற செல்போனை சுனில் கொச்சியில் உள்ள ஏரி ஒன்றில் வீசிவிட்டார் என்று சுனில் கூறியிருக்கிறார். . இந்த வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வீசிய இடத்தை சுனில் போலீசாருக்கு அடையாளம் காட்டினார். கொச...

அழைத்த நகைச்சுவை மறுத்த மக்கள் நாயகன்

செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானாசேர்ந்த கூட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க மக்கள் நாயகனை இயக்குனர் மற்றும் ஹீரோவின் சம்மதத்துடன் அணுகியுள்ளார். ஆனால் மக்கள் நாயகன் நடிக்க மறுத்துவிட்டார் கதாநாயகனாக 50ஐ பூர்திசெய்யாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவர் ஏற்கெனவே ராவணன் திரைப்படத்தில் இளையதிலகம் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அழைத்தபோதும் இதே போன்று தவிர்த்து விட்டார். மக்கள் நாயகன் இதுவரை நடித்துள்ள எந்த ஒரு படத்தின் தலைப்பும் அதற்க்கு முந்தைய தமிழ் படங்களின் தலைப்பை வைத்ததில்லை ஒன்று மட்டும் நிச்சயம் இன்றளவிலும் மக்கள் நாயகனுக்கு ரசிகர் கூட்டம...
மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின்  கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள்  வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

செய்திகள்
  தமிழ் சினிமாவில் சமீப காலமாக திருட்டு கதைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பட வெற்றி விழாக்களும் போலியாக மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளி நடிகர்களின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற விழ £க்கள் என்று பகீர் உண்மையை தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் சினிமாவில் பல வெற்றி விழாக்களின் பே £லித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் வாட்ஸ் அப் குரல் மூலம் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பணம்போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸ் ஆன இரண்ட £வது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். அந்...

நடிகர் தியாகராஜன்.புகழாரம்

செய்திகள்
  விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தை 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. "சில  வருட கால இடைவேளைக்கு பிறகு  நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் 'எமன்'.  எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சத்தோடு ஜீவா சங்க...

சினேகா உறுதிமொழி

செய்திகள்
நடிகை சினேகா சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் பற்றி செய்தியாளர்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது : "என்னுடைய  துறையில்  பணியாற்றும்  என்  சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை  உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.  இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,  நம் சமூதாயத்தில்   ஒவ்வொரு நாளும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல...
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

செய்திகள்
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது....
‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

செய்திகள்
பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய பரத்... “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்....
கல்யாணத்தில் முடிந்த காதல்  கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

கல்யாணத்தில் முடிந்த காதல் கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
கல்யாணத்தில் முடிந்த காதல் கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம் ரிஸி பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் - நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை ரிஸி பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் - சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட முதல் நட்சத்திர ஜோடி என்ற பெயரை கார்த்திக், சாட்னா ஜோடி பெற்றிருக்கிறது....
அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

செய்திகள்
அதே கண்கள்... விளம்பரமில்லா வெற்றி..! கலையரசன் நடிப்பில் சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்திய வெளியான படம் ‘அதேகண்கள்’. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய செலவிடும் தொகை ஒரு பட தயாரிப்பை மிஞ்சும் அளவுக்கு மாறியுள்ளது. அந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரசிகர்களுக்கு ஏற்ற கதையில்லாமல் போனால் கோடிகளில் விளம்பரம் செய்தாலும் பட ரிசல்ட் படுத்துக் கொள்ளும். சூப்பர் ஸ்டார் படம் தொடங்கி அறிமுக நடிகர்கள் படம்வரை இதுதான் இன்றைய கோலிவுட் நிலை. அதிலும் குறிப்பாக பட ரிலீஸ் நேரத்தில் டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், பேப்பர் விளம்பரம், இணையதள விளம்பரம் இவை தவிர ‘மிரட்டல் விளம்பரம்’(இதுதனி ரகம்). இப்படி பல முனைகளில் படத்தை விளம்பரப்படுத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது. தமிழ் சினிமாவில் சமீபத்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் படம் தொடங்கும்போத...
‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

செய்திகள்
ரகுமான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார். மரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பகடி ஆட்டம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படத்தில் போலி சான்றிதழ் தயாரிக்கும் அதிரடி வேடத்தில் நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகி வேடத்தில் நடிக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டும் வேடத்தில் கௌரி நந்தா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, மற்றும் சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர...