டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படம் ‘அசரீரி’
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!
புத்தாண்டு வெளியீடாகத் பிரேம் குமார் - ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் திரைக்கு வரும் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
2027-ஐத் தொடங்கி வைக்க வருகிறது பிரேம் குமார் - ஃபஹத் ஃபாசிலின் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்...








