புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, “ரைட்டர்” ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, “ரைட்டர்” ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா   தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கும்போதே சர்வதேச அளவில் கவனம் பெற்ற லிடியன் குடும்பத்தாரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. பின்னர் பிரபல சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான முல்லை கோதண்டம் இருவரின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சங்கத்தின் செயலாளர் ஆபிரகாம் அவர்களின் மகன் சந்தோஷ் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்...
ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு

ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் அடங்காத அஜீத் குரூப்ஸ் கோவை என ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது, "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்ட...
நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள், வீடியோ
  நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதாவிஜயகுமார் ஓப்பன் டாக் I "my mistakes" actress vanitha open talk   https://www.youtube.com/watch?v=VabE3aX9Xa0
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு! புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என புஷ...
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்ப...
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்....
மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்!

மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்! இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்... வைரலாகும் புகைப்படம்! கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தியாவின் முதல் கடல் கன்னி ஆண்ட்ரியா! வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிந்துமதி, முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். வருகிற பிப்ரவரி ...