இதுதான் நான் செய்த தவறு - வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.
அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந...
ஒரு பாடலுக்கு நடனம்.... பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!
ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஐஸ்வர்யா அடுத்து பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்குகிறார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார். தனது குழுவினரு...
7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !
மெகா பட்ஜட்டில் தயாரிக்கும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன்!!
இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய பட்ஜ...
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். ஞானவேல் இதனை இயக்கி உள்ளார்.
இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது.
படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன.
தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ ய...
அருவி பட இயக்குனருக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்!1
2017-ஆம் ஆண்டு நடிகை அதிதி பாலன் நடித்து வெளியான திரைப்படம் ’அருவி’. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான வாழ் திரைப்படமும் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் நேற்று இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், டீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த புதுமணத்தம்பதிக்கு ஆர்.டி.ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இவர் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி ஹீ...
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
&n...
சினிமா பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது - நடிகை சுருதிஹாசன் வருத்தம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன்.
இவர் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுருதிஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சுருதிஹாசன் கூறியதாவது, “நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அதை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. காதல் திருமணம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு இஷ்டம் இல்லை.
சினிமாவிற்கு வந்த புதிதில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அப்போது நான் இசைத்துறையில் மட்டுமே இருந்தேன். எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டிய...
நான் நல்லவனா கெட்டவனா? - குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.
2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்...