பார்க்கிங்காக வரும் சண்டை.. ஹரிஷ் கல்யாணின் ”பார்க்கிங்”
பார்க்கிங்காக வரும் சண்டை.. ஹரிஷ் கல்யாணின் ”பார்க்கிங்”
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த எல்ஜிஎம் படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் தான் பார்க்கிங். திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ...









