செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந...
கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர...
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது 2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி'. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஜோதிகாவை ...
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பா...

2.O படத்தின் சென்சார் ரிசல்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்....
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்...
மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்!

மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகரும் இயக்குநருமான கே. நட்ராஜின் மகள் ரஜினியை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும் ரஜினியும் (அவரது மனைவி) கடந்த ஓராண்டாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். ...
அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தொண்டர்களிடம் துண்டு விரிக்கும் கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என சொல்லலாம் என நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.“கருத்துக்குருடரா, காழ்ப்புணர்ச்சி முரடரா” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த கட்டுரையில், பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக...
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி

சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். 1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக...
கோலார் தங்க வயலின் தலைவனாகும் சரித்திர படம்  கே.ஜி.எப். 5 மொழிகளில் 21ல் ரிலீஸ்..!

கோலார் தங்க வயலின் தலைவனாகும் சரித்திர படம் கே.ஜி.எப். 5 மொழிகளில் 21ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF திரைப்படம்..! கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF (கோலார் தங்க வயல்) திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரைலர் வெளியானது! கன்னட திரையுலகில் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் KGF. மூன்று ஆண்டுகளாக திரைப்பட வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது முதற்பாகத்திற்கான வெளியீடு நெருங்கியுள்ளது. பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள KGF திரைப்படம் கன்னட மொழியில் உருவான போதிலும், கன்னட பதிப்பில் வெளியாகும் அதே நாளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 21-ஆம் நாள் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழில் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்டரி நிறுவனம் இந்த த...