புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சினி நிகழ்வுகள்

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்

கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணம் செய்து பிரிந்த பிறகு அமலாபால் முழுவதுமாக மாறி விட்டார். முன்பு குடும்பபாங்கான உடை அணிவதில் கவனம் செலுத்திய அமலாபால் இப்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டார். தனது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார். இது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார். ஜிம்முக்கு செல்கிறார். ஓய்வு கிடைத்தால் ஊர்சுற்றுகிறார். சூட்டிங் இல்லையென்றால் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் புறப்பட்டு விடுகிறார். அந்த படங்களையும் இணையதளங்களில் வெளியிடுகிறார். படவாய்ப்புகள் வந்தாலும் அதில் பிடித்தமான கதையை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாக கூறுகிறார். சமீபத்தில் அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனியாக ...
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்

மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது. இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்...
3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும்  டிஸ்மிஸ்

3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்…முன்ஜாமீன் மனு மீண்டும் டிஸ்மிஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்....
தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் முதற்முயற்சியை கருத்தில் கொண்டு படத்தை அடுத்த மாதம் அதாவது, ஜூன் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகி...
இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தமிழ் சினிமாவின் 48 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக இடையில் நின்றது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது ‘சீமராஜா’ படக்குழு. மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள். இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு சிவகார்த்திகேயன் பங்குபெறும் சண்டைக்காட்சியை படம் பிடிக்கவுள்ளார். இதற்கிடையே இன்று படத்தின் இயக்குநர் பொன்ராமின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதன் பிறகு 10 நாட்கள் செ...
நாளை செம போதயோடு வரும் அதர்வா

நாளை செம போதயோடு வரும் அதர்வா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு...
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:- “தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பி...