வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவங்கள் 16’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன். இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அரவிந்த் சாமி டப்பிங் பேச வேண்டியது மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் சென்சாருக்கு அப்ளை செய்து...
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வ...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொட...
‘இந்தியன் 2’ பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!

‘இந்தியன் 2’ பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
'இந்தியன் 2' பட ஸ்டோரி போர்டு ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம்..! ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தன் முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள 'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது '2.0' இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார். 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் காட்சி உருவாக்கத்தில் ஓவியத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை சமீபத்திய திரைப்படங்கள் மூலம் நிரூபித்தவர் விஸ்வநா...
ஆண்டாள் சர்ச்சை… வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

ஆண்டாள் சர்ச்சை… வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டாள் சர்ச்சை... வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..! ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எ...
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது..!

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு 1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், சென்னை முன்னாள் மேயரும், மராத்தான் வீரருமான சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகிய 11 பேருக்கு 2018-ம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை தி.க. தலைவர் வீரமணி அ...
தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே தனது 32–வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்ட...
தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்....
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...