திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால் பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்...









