புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சினி நிகழ்வுகள்

சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி,அஜய்ரத்னம், வையாபுரி,பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது.. லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது . யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன...
காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர...
விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம்-திரிஷா நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் குவித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லரை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார். கஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறைய படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். சாமி-2 படத்தின் டிரெய்லரை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள் ட...
பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள். தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சத்யஜித்ரே படம் போல இருக்கிறது" ; ஒரு குப்பை ​கதைக்கு வைகோ பாராட்டு  சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பைக்​கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்படத்தைக்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்​சியின் பொதுச்செயலாளர் ​வைகோ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ ​ இந்தப்படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.. "பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை கதை' படத்தை பார்க்...
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதனையடுத்து, டீசர், டிரைலர்கள் வெளியிட இருக்கிறார்கள். பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இப்படத்தின் மீது அதிக...
காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

CINI NEWS, HOME SLIDER, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட கன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாரசாமியை நேற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- தண்ணீர் பிரச்சனையோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டால், அதை  தீர்த...
ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். “ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ   “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை  ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம்...
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ...
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெ...