ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

 

மீண்டும் கதை திருட்டு புகார்
சாட்டையை வீசிய பாக்யராஜ்!
அப்செட்டான முருகதாஸ்!!

நடிகர் விஜய் நடிக்கிற படங்களை எப்போதெல்லாம் முருகதாஸ் இயக்குகிறாரோ அப்போதெல்லாம் அந்த கதை அடுத்தவர் கதையாகவே குற்றம்சாட்டப்பட்டு கோலிவுட் பரபரப்பாகும்… ஒரு படம் என்றால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார்கள் எனலாம்… இரண்டாவது கதை என்றாலும் அதே நிலையை சொல்லிக் கொள்ளலாம் வரிசையாக எடுக்கிற படங்கள் எல்லாம் அடுத்தவர் கதையாக இருந்தால்… அதிலும் கூட உதவியாளராக இருந்தவர் கதையையே நம்ப வைத்து திருடினால்…
இந்த குற்றச்சாட்டடில் இந்தமுறை மிக நுட்பமாக சிக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்… கத்தி, ஏழாம் அறிவு போன்ற படங்களைப்போல இந்த சர்கார் கதையையும் அத்தனை சீக்கிரம் முருகதாஸ் கடந்து போய்விட முடியாது…
சரி… இந்த சர்கார் கதை எப்படி… யாரிடம் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்…
பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறவர் வருண்ராஜேந்திரன். எப்படியாவது இயக்குனர் ஆகிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் வாய்ப்பு தேடுகிறார்.


செங்கோல் என்ற பெயரில் அரசியல் கதை ஒன்றை எழுதி அதை பலரிடம் சொல்கிறார். கதை நன்றாக இருப்பதாக கருத்துக்கள் வந்ததும் 2007ம் ஆண்டில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் செங்கோல் என்ற தலைப்பிட்டு அந்த கதையை பதிவு செய்கிறார். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சில திருத்தங்களோடு அதே மீண்டும் பதியப்படுகிறது.
இந்த சூழலில், இந்த கதை விஜய்க்கு பொறுத்தமாக இருக்கும் என்பதால் அவரை சந்திக்க முயற்சிக்கிறார். அப்போது விஜய் அப்பா எஸ்ஏ.சந்திரசேகரிடம் போய் கதை சொல்கிறார். அவரும் கதையை கேட்டு விட்டு நல்ல கதை. விஜய்க்கு பொறுத்தமாக இருக்கும். கொஞ்சம் காத்திருந்தால் நல்ல சூழலில் விஜய்யிடம் கதை சொல்ல வைக்கிறேன் என்று சொல்லியதோடு, அதுவரை எனது இயக்கத்தில் சுக்ரன் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய் என்று சொல்லியிருக்கிறார். அதன்காரணமாக விஜய்யுடன் கொஞ்சம் நெருக்கமாக அவரிடம் கதை சொல்லியிருக்கிறார் அவருக்கும் கதை பிடித்துப்போக காத்திருக்க சொல்லியிருக்கிறார்.


ஏதோ சூழல் அதன்பிறகு அங்கிருந்து வெளியே வந்து பிரகாஷ்ராஜ், சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன் என சினிமா பிரபலங்கள் பலரிடம் கதை சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கிறார். கதை பிடித்துப்போனாலும் ஏதோ காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது. அந்த சூழலில் மீண்டும் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அப்போதும் அவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார். விஷாலிடம் சொல்லியிருக்கிறார். விஷாலுக்கு இப்போதைக்கு அரசியல்படம் வேண்டாமே என்று தவிர்த்து விட்டாராம். அர்ஜூனும் ‘முதல்வன்’ படத்திற்கு பிறகு அரசியல் படம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதை கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் விஜய் விஷால் இருவருக்கும் நெருக்கமான போட்டோகிராபர் ஒருவர் மூலமாக மீண்டும் விஜய்க்கு கதை சொல்ல… அதன்பிறகு கிணற்றில் போட்ட கல்லாகிப்போனது கதை.
வருண் ராஜேந்திரனும் வேறு கதையில் கவனம் செலுத்த தொடங்க… திடீரென முருகதாஸ் இயக்குத்தில் விஜய் நடிக்கும் சர்கார் அறிவிப்பு வருகிறது… கதை என்று ஒரு தகவல் வெளியாக அதிர்ச்சியான வருண் சர்கார் குறித்து விசாரிக்கிறார்… கடைசியில் தனது செங்கோல் கதைதான் சர்கார் ஆக மாறியிருப்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்.
ஆரம்பத்தில் புகாரை ஏற்க மறுத்தவர்கள் வருண் ராஜேந்திரன் வைத்திருக்கிற ஆதாரங்களை பார்த்ததும் வேறு வழியின்றி புகாரை பெற்று விசாரிக்க சர்கார் கதையும், செங்கோல் கதையும் ஒன்றுதான் என்றும் வருண் கதையை திருடிதான் சர்கார் படமெடுக்கிறார் முருகதாஸ் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இது தொடர்பாக முருகதசை வீட்டுக்கு வரவழைத்து சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் பேசும்போதும் முருகதாஸ் பிடிகொடுக்காமலேயே பேசியிருக்கிறார். இதனால் கடுப்பான பாக்யராஜ் இனிமேலும் தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று நினைத்து சங்கத்தின் சார்பில் இரு கதைகளும் ஒன்றுதான். செங்கோல் கதைதான் சர்கார் என படமாக்கப்படுகிறது. கதை திருட்டு உண்மை என்று வருண் ராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நீதிமன்றத்தில் வருண் வழக்கு தொடுக்கிறார்.
இத்தனை பிரச்னைகள் பரபரப்பாக இருக்கும்போதும் விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

323 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன