புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி செய்யுங்களேன் – பூச்சி முருகன் வேண்டுகோள்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி செய்யுங்களேன் – பூச்சி முருகன் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி - முன்னணி நட்சத்திரங்களுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். குறிப்பாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 80 சதவீதம் பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருந்துக்கொண்டு அன்றாட வருமானத்தை நம்பி வாழ்பவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் ஃபெஃப்சியில் அங்கம் வகிக்கவில்லை. மேலும் வெறும் 10 சதவீத உறுப்பினர்களே அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரையறைக்குள் வருகிறார்கள். எனவ...
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா! தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....
யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்!

யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளை புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். 'தலா அல் பத்ரு அலாய்னா' எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது....
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய...
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் - பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். ...
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’!

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தேன்’! கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் தேன். இப்படத்தில் தருண் குமார் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இதன் தெலுங்கு ரீமேக்கையும், கணேஷ் விநாயகன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், அரவான், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’!

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’! சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளதாம்....
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார்!

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார்! கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி வழங்கி உள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சௌர்ந்தயா நிதி வழங்கினார்....
கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வ...