புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக  உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் வழங்கினார்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கினார். இந்நிலையில், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். இதேபோல் ...
சிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜா விலகல்!

சிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜா விலகல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜா விலகல்! மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ். தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ள இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்படத்தை இயக்க பிரபல இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தமானார். அவரிடம் இப்படத்தின் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியுள்ளார் சிரஞ்சீவி. மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்கா...
நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி! தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....
பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி!

பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி! தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து காயல் என்னும் படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ்திலக், பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை தமயந்தி இயக்கி இருக்கிறார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது....
ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!

ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா - வைரலாகும் புகைப்படங்கள்! வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது திரிஷா தான், அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன....
கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்! தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண...
லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்!

லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
லாக்டவுனில் காதலருடன் பொழுதை கழிக்கும் சுருதிஹாசன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்”...
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!

சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது. உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையு...
பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி! நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் நடிக்க சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டால்...