கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு - நார்வேயில் அதிர்ச்சி
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டில் உள்ள மருத்துவர்களும் இறங்கியுள்ளனர். சில நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-Bio NTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 ...









