‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!
மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் ...









