புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

sports

கொல்கத்தா அணி 4-வது தோல்வி!

கொல்கத்தா அணி 4-வது தோல்வி!

HOME SLIDER, sports, செய்திகள்
கொல்கத்தா அணி 4-வது தோல்வி ! ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திரிபாதி 36 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ்மோரிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வென்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்னும், டேவிட் மில்லர் 24 ரன்னும், ஷிலம் துபே, ஜெய்ஸ்லால் தலா 22 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் பெற்ற 2-வது வெற்றி (5 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (5 ஆட்டம்) சந்தித்தது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பந்துவீச்சாளர்கள...
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.  3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது....
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்! வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு!

தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு!

HOME SLIDER, sports, செய்திகள்
தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு! பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். கடந்த ஐந்து போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் வீழ்த்த முடியாம திணறிய தீபக் சாஹர் பந்து வீச்சு இன்று தீப்பொறியாக இருந்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் மயங்க் அகர்வால் (0), அவரின் 2-வது ஓவரின் 5-வது பந்தில் கேஎல் ராகுல் (5) ரன்அவுட், 3-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் (10), 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரன் (0), 4-வது ...
10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

HOME SLIDER, sports
  10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!   ஐபிஎல் 2021 சீசனின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது. திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இறுதியில், கொல்கத்தா நைட் ர...
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரிகோம்..!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரிகோம்..!

HOME SLIDER, sports
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிப‍ெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வரும் மே 21 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரைப் பொறுத்தவரை, மேரிகோம் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். அவற்றுள் 5 தங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு, இத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேரிகோம் 51கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளார். சமீபத்தில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில், இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற பிறகு, இவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். மேரிகோம் உடன், ஆசிய தொடரில் பங்கேற்கவுள்ள மற்றொரு முக்கிய வீராங்கனை லவ்லினா போரோஹெய்ன். 69 கிலோ எடைப்பிரிவில் இடம்பெற்றுள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் ...
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

HOME SLIDER, sports, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்! 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர் கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 2 வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர்பட்டேல், பெங்களூர் அணியை சேர்ந்த படிக்கல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷர்படேலுக்கு மும்...
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பயோபிக்கும் உருவாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும், இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை டாப்ஸி, தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ம...
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா? இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டு...
சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா!

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா! கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. 2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். ...