தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண்.
இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், "ராம்சரண் 15' படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது.
இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்...
2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் சிபி சத்யராஜ்.
அதன்பின் அவருடைய தந்தை சத்யராஜுடன் சேர்ந்து மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
அதன்பின் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20-வது படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இச...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல்.
இவர் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவர் கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் ’விலங்கு’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.
இதில் விமலுடன் இணைந்து இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் விமல் பேசியது, ”இந்தக் கதை முதலில் படமா...
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்பட...
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார்.
இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அமீர் பேசியாதவது, இந்த காலத்தில் ப...
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது.
விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைப்பெற்ற வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது.
இதனை இயக்குனர...
பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் - ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.
கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக ந...
விஜய்யின் அரபிக் குத்து பாடல் 10 மில்லியன் நிகழ்நேர பார்வைகளைப் பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
...
இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ஆர்.மாதவன்.
இவர் முதல் முறையாக இயக்குனராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இப்படத்தின் டிரைலர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் மாதவன் அறிவித்துள்ளார்.
இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
நடிகர் மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து, எழுதி, இயக்கியும் உள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா க...