‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்!
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.
கிட்டார் கம்பி மேலே நின்று
'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
பிராஜக்...









