தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பா.ம.கவுக்கு கண்டனம்!
திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் 10-ம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்று பா.ம.க மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் க...









