செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

MOVIES

ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!

ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி! இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, தளபதி பட பாணியில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள அவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தினர் இது உண்மைய...
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்! இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார். ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளன...
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பயோபிக்கும் உருவாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும், இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை டாப்ஸி, தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ம...
தலைவி படத்தின் புதிய அப்டேட்!

தலைவி படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தலைவி படத்தின் புதிய அப்டேட்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கங்கனா பிறந்தநாளில் வெளியானது. இது ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல...
தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்? பூஜா ஹெக்டே விளக்கம்!

தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்? பூஜா ஹெக்டே விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்? பூஜா ஹெக்டே விளக்கம்! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், தளபதி 65 பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்....
முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்!

முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்ட...
லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லால் எனக்கு கட்டப்பா - கார்த்தி! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. பல படங்களில் வில்லனாக மிரட்டிய லால் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லால் பற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, ‘லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார். என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்’ என்றார்....
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். “வயிறுடா” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்....