மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!
மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!
விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு ஆகியவை மட்டுமே அருண் விஜயை மிகப்பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கவில்லை. அத்தோடு மிகவும் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அவரது படைப்பாற்றல் மற்றும் கதை திறனும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை அவர் பால் ஈர்க்க காரணம். அவர் இப்போது தென்னிந்திய சினிமாவில் 'திரில்லர்' வகைகளின் பிராண்ட் தூதராகவே மாறி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் ஒரிஜினல் மற்றும் டப்பிங் பதிப்பு என இரண்டிலுமே மிகப்பெரிய ஆர்வத்தையும், வரவேற்பையும் பெறுகிறது. தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவரது மெடிக்கல் கிரைம் த்ரில்லர் 'குற்றம் 23', தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது. இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனரா...









